மைக் கிடைத்தால் போதும், அண்ணாமலைக்கு அப்படி ஒரு வியாதி என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூற, நீங்கள் எப்படி பதவிக்கு வந்தீர்கள் என்று தெரியும் என அண்ணாமலை கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுக்க அதிமுக - பாஜக இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
இந்தநிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து, அதிமுகவினர் ஆங்காங்கே கண்டன போஸ்டர்கள் ஒட்டிவருவதோடு, பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்தும் போராட்டம் நடத்த துவங்கியுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று, விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ வழிகாட்டுதலின் படி, அஇஅதிமுக இலக்கிய அணி இணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சின்னப்பன் தலைமையிலும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.கே.பெருமாள் Ex.MLA முன்னிலையில், பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ், நகர செயலாளர் மாரிமுத்து, எட்டையபுரம் நகர செயலாளர் ராஜகுமார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சுரேஷ் குமார், ஒன்றிய மாணவரணி செயலாளர் கண்ணன், நிர்வாகிகள் பாண்டியராஜன், சண்முகச்சாமி, ஆனந்த், கணேசன், இலந்தைகுளம்ரவி சங்கர், ராஜாமணி, பேரூராட்சி பிரியா, சாந்தி, ஆறுமுகத்தாய் மற்றும் எட்டையபுரம் நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.