தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றங்களை தடுப்பதற்காக துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் குற்றங்களை தடுக்கவும், கட்டுப்படுத்தும் வகையில் ஆன்ட்டி ரவுடி டீம் (Anti Rowdy Team) போலீசார் துப்பாக்கி ஏந்தி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் குற்றப்பட்டியிலிடப்பட்ட இடங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருப்பதற்காக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசாரின் இது போன்ற ரோந்து பணியானது எங்களுக்கு பாதுகாப்பான நிலையை உணரச்செய்கிறது என சொல்கின்றனர் பொதுமக்கள். இதனால், புதிய எஸ்பியின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரிய பாராட்டை பெற்று வருகிறது.