சாயர்புரம் டாக்டர் ஜி.யு.போப் பொறியியல் கல்லூரிக்கு சிறந்த நாட்டு நலப்பணி திட்டத்திற்கான விருது அண்ணா பல்கலைக்கழகம் சார்பாக வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரத்தில் உள்ள டாக்டர் ஜி.யு. போப் பொறியியல் கல்லூரிக்கு 2022 - 2023 ஆண்டிற்கான சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட விருது அண்ணா பல்கலைக்கழகம் சார்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகம் முதல்வர் பேராசிரியர் டாக்டர் செண்பக விநாயகமூர்த்தி டாக்டர் ஜி.யு. போப் பொறியியல் முதல்வர் டாக்டர் ஜாஃபிந்த் கு வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில், திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக பிராந்திய நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் ஜெயந்தி, அண்ணா பல்கலைக்கழக நாட்டு நல பணி திட்ட அலுவலர் பேராசிரியர் மதுமதி, போப் பொறியியல் கல்லூரி தாளாளர் ராஜேஷ் ரவிச்சந்தர் மற்றும் நாட்டு நலப்பணி அலுவலர் டென்னிசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்