தூத்துக்குடியில் மாணவ, மாணவிகளுக்கான கலைஞரின் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டியை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த வடக்கு - தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், திமுக வடக்கு மாவட்ட செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கி பேச்சுப் போட்டியை துவக்கி வைத்தார். வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன் வரவேற்புரையாற்றினார்.
திமுக மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் இன்பா ரகு முன்னிலை வைத்தார். நிகழ்ச்சியில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பேச்சுப்போட்டியில் வே.மதிமாறன், புதுக்கோட்டை விஜயா, இந்திரகுமார் தேரடி, பொள்ளாச்சி உமாபதி, சிவ ஜெயராஜ், மில்டன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
இதில் மாவட்ட முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கொடுக்கப்பட்ட தலைப்புகளில் பேசினர். இதில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ மாணவிகள் மாநில அளவிலான நடைபெறும் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள், பிரதீப், மகேந்திரன், ராதாகிருஷ்ணன், பாரதி, ஜோசப் அமல்ராஜ், தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பாலமுருகன், சுதாகர், பால்துரை, ஏ.எம்.ஸ்டாலின், குமார் பாண்டியன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.