• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றார் இளம்பகவத்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக இளம்பகவத் ஐஏஎஸ் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டத்தின் 28வது புதிய ஆட்சியராக க.இளம்பகவத் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர் ஆட்சியர் க.இளம்பகவத், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 

தூத்துக்குடி மாவட்டமானது மிகப் பாரம்பரிய மாவட்டம். இந்த மாவட்டத்தில் முக்கியமான தலைவர்கள் வாழ்ந்த மாவட்டம் மற்றும் வரலாறு சிறப்பு மிகுந்த மாவட்டம். இந்த மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மாவட்டத்தினுடைய நலன்களுக்கும், மாவட்டத்தில் இருக்கக்கூடிய மக்களின் வாழ்வாதாரத்திற்கும் என்னால் முடிந்த உதவிகளை செய்வது தான் என்னுடைய நோக்கம். 

குறிப்பாக, அரசுத்துறைகளில் இருக்ககூடிய வளர்ச்சி திட்டங்கள், கல்வி, மருத்துவம், திறன் மேம்பாடு, திறன்மேம்பாடு சார்ந்த வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் கவனம் செலுத்துவது என்னுடைய முக்கியமான நோக்கமாகும். அதுமட்டுமல்லாமல், அரசினுடைய நலத்திடங்கள் அனைத்தும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதிலும், மாவட்டத்தினுடைய வளர்ச்சி அனைவருடன் உள்ளடங்கிய வளர்ச்சியாக இருக்க வேண்டும். மாவட்டத்தினுடைய வளர்ச்சி பலன்கள் அனைத்து மக்களுக்கும் சென்றடைவதற்கான முயற்சியை மேற்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சாலைகளை அகலப்படுத்தும் பணி : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!

தூத்துக்குடி மாநகராட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் : மேயர் ஜெகன் பெரியசாமி!

  • Share on