தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சாலைகளை அகலப்படுத்தும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகரின் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு சாலைகளை அகலப்படுத்தியும் விரிவுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நான்காம் கேட் பகுதியில் மின் கம்பத்தை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் ஓரத்தில் அமைக்கும் பணிகளையும், மச்சாது நகர், ராம் நகர்,ரஹமத் நகர் மற்றும் குறிஞ்சி நகர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.