தூத்துக்குடியில் இருந்து 3 புதிய பேருந்துகளை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, எட்டயபுரம், காந்திநகர், மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், திண்டுக்கல் பைபாஸ், ஒட்டன்சத்திரம், தாராபுரம் வழியாக திருப்பூருக்கு ஒரு பேருந்தும், கோவில்பட்டி, சாத்தூர், ஆர்ஆர் நகர், விருதுநகர், திருமங்கலம் வழியாக 2 பேருந்துக்கள் என மொத்தம் 3 புதிய பேருந்துக்களை இன்று முதல் இயக்கும் விழாவானது தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு, அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் கனிமொழி எம்பி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி கோட்ட மேலாண்மை இயக்குனர் தசரதன், தூத்துக்குடி மண்டல பொது மேலாளர் பாலசுப்பிரமணியம், தூத்துக்குடி நகர கிளை மேலாளர் ரமேஷ் கார்த்திக், புறநகர் கிளை மேலாளர் சுரேஷ், கோவில்பட்டி கிளை மேலாளர் ரமேஷன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தூத்துக்குடி மண்டல மக்கள் தொடர் அலுவலர் தங்கவேல், தொமுச திருநெல்வேலி மண்டல பொதுச்செயலாளர் தர்மன், பொருளாளர் முருகன், மத்திய சங்க செயலாளர் கருப்பசாமி, நகர தலைவர் முருகன், செயலாளர் லிங்கசாமி, பொருளாளர் மணோகரவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் பிரேம் குமார், செண்பகராஜ், ராஜா, உறுப்பினர்கள் குமாரசாமி, பெருமாள், அருணாச்சலம், சுதாகர், சரவணன், கணேஷ் படையப்பா, வி.சரவணப்பெருமாள், தூத்துக்குடி மாமன்ற உறுப்பினர்கள், அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.