• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 22ஆம் தேதி மக்கள் குறைதீர்க்கும் முகாம்!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வருகிற 22ஆம் தேதி (வியாழக்கிழமை) கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. 

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் அரசின் பல்வேறு திட்டங்களின் வாயிலாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மேலும் பகுதி சபா கூட்டங்களும் உரிய காலங்களில் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகள் அனைத்தும் முறையாக பரிசீலிக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து முடிக்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை தோறும் மண்டலம் வாரியாக கோரிக்கைகளை கேட்டு அறிந்து உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் மேயர் தலைமையில் தொடர்புடைய அலுவலர்கள், மண்டல வாரியாக முகாம்களில் கலந்து கொண்டு பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது. 

இதன் தொடர்ச்சியாக நடைபெற வேண்டிய அடுத்த மண்டல முகாமானது நிர்வாக காரணங்களினால் வருகின்ற புதன்கிழமைக்கு பதிலாக அதற்கு அடுத்த தினமான வியாழக்கிழமை (22.8.24) அன்று நடைபெற உத்தேசிக்கப் பட்டுள்ளது. அதன்படி, மேற்படி தினத்தில் கிழக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து காலை 10 மணிக்கு கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட (வார்டு எண்கள் 21 முதல் 29, 38 முதல் 41,46 மற்றும் 47) ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட உள்ளது. 

மேற்படி முகாமில் சொத்து வரி நிர்ணயம், சொத்துரி பெயர் மாற்றம், திருத்தங்கள், புதிய குடிநீர் இணைப்பு,தண்ணீர் கட்டண பெயர் மாற்றம், தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பொதுச் சுகாதாரம், உரிமை ஆணை கட்டணங்கள், தொழில்வரி, பாதாள சாக்கடை, பிறப்பு இறப்பு சான்று மற்றும் திருத்தங்கள் உள்ளிட்ட மாநகராட்சி சேவைகள் குறித்து கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளிக்கலாம். எனவே, மேற்படி முகாம்களில் பொதுமக்கள் தங்கள் தேவைகளை கோரிக்கை மனுக்களாக வழங்கி பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்களில் ஜாதி ரீதியாக ஆடல் பாடல் ஒலித்தால்....எஸ்பி கொடுத்த எச்சரிக்கை!

அம்மா பேரவை இணைச் செயலாளருக்கு டிஜிட்டல் வடிவிலான புதிய அடையாள அட்டை : முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் வழங்கினார்!

  • Share on