• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்களில் ஜாதி ரீதியாக ஆடல் பாடல் ஒலித்தால்....எஸ்பி கொடுத்த எச்சரிக்கை!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்களில் ஜாதி ரீதியாக ஆடல் பாடல் ஒலிக்க விடுவது, கோசங்கள் எழுப்புவது என பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பொது இடங்கள் மற்றும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும் இடங்கள் ஆகியவற்றில் ஜாதி ரீதியாக ஆடல் பாடல்களை ஒலிக்க விடுதல், சாதி ரீதியான கோசங்களை எழுப்புதல், உடையணிதல், அடையாள சின்னங்கள் அணிந்து ஜாதி ரீதியான மோதல்களை ஏற்படுத்தி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்  தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் : இளம் தலைமுறையினருக்கான இன்ஸ்பிரேஷன்...யார் இந்த இளம்பகவத் ஐ.ஏ.எஸ்?

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 22ஆம் தேதி மக்கள் குறைதீர்க்கும் முகாம்!

  • Share on