தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிடாரம் அருகே புதியம்புத்தூர் பஜாரில் டீக்கடை , பலசரக்கு, ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட கடைகளில் இன்று சுகாதார ஆய்வாளர்கள் தேவசுந்தரம் அருணாச்சலம், மானக்க்ஷா, ஆழ்வார்சாமி, மருத்துவமில்லா மேற்பார்வையாளர் முருகராஜ் ஆகியோர் கொண்ட சுகாதாரத்துறை குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது காலாவதியான உணவு பொருள்கள் வைத்திருந்த மூன்று கடைக்காரர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட கேரி பேக்குகள் வைத்திருந்த மூன்று கடைக்காரர்களுக்கு அபராதமும் விதித்தனர். மேலும், காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்தனர்.