எட்டயபுரத்தில் அதிமுகவினருக்கு டிஜிட்டல் வடிவிலான புதிய அடையாள அட்டையை கடம்பூர் ராஜூ எம்எல்ஏ வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு டிஜிட்டல் வடிவிலான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எட்டையாபுரம் நகரச் செயலாளர் ராஜகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அதிமுகவினருக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்.
இந்நிகழ்வில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.