• vilasalnews@gmail.com

சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தின் முன்பு நாளை முதல் சாகும் வரை உண்ணாவிர போராட்டம் நடத்தப்போவதாக பெண் அறிவிப்பு!

  • Share on

சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், பட்டா வழங்கப்படாமல் அலைக்கழிப்பது செய்யப்படுவதை கண்டித்து  நாளை உண்ணாவிரதம் போராட்டம் நடத்த இருப்பதாக  அப் பெண் அதிகாரிகளுக்கு மனு அனுப்பி உள்ளார்.

சாத்தான்குளம் அருகே உள்ள கந்தசாமி புரத்தை சேர்ந்த பேச்சிமுத்து என்பவரது மனைவி சோமசுந்தரி. இவர் தனது வீட்டிற்கு பட்டா வேண்டி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். இந்த நிலையில் அந்த மனு குறித்து எந்தவித தகவலும் இல்லை . இந்நிலையில்  முதலுரில்  நடந்த  மக்களுடன் முதல்வர்  திட்ட முகாமில் மனு செய்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 1-ம் தேதி திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாரன் தலைமையிலான அதிகாரிகள் அந்த மனு மீதான விசாரணைக்கு அவரது வீட்டிற்கு வந்தனர் . அதன்பின்  உடனடியாக பட்டா வழங்கப்படும் என உறுதி அளித்து சென்றனர். ஆனால் அதன் பின்னரும் இதுவரை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க படவில்லை. இதனால் மன வேதனை அடைந்த  சோமசுந்தரி  உடனடியாக பட்டா வழங்க கேட்டு   நாளை( ஆகஸ்ட் 15)  சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளார் .இது தொடர்பாக அவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், தாசில்தார் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பி உள்ளார்  .

  • Share on

தென்னம்பட்டி - கொத்தாளி சாலைகள் படும் மோசம் : விரைந்து சாலை பணிகளை தொடங்க பொதுமக்கள் கோரிக்கை!

ஸ்ரீவைகுண்டத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சாலை மறியல் போராட்டம் ஒத்திவைப்பு!

  • Share on