தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே தென்னம்பட்டியில் இருந்து கொத்தாளி வழியாக கோவிந்தாபுரம் செல்லும் சாலை மற்றும் கொத்தாளியில் இருந்து கயத்தாறு செல்லும் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்று படுமோசமாக உள்ளது.
இதனால் அவசர வேலை நிமித்தமாக செல்வோர் மற்றும் பணிக்கு செல்வோர் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது மழை பெய்து உள்ளதால் சேரும் சகதியாகவும் காணப்படுகிறது. மேலும் இது குறித்து தென்னம்பட்டியைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் கூறுகையில்:-
மேற்கண்ட சாலைகள் படுமோசமாக உள்ளதால் மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு உடனடியாக சாலை பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். அதிகாரிகள் தரப்பிலோ, மேற்கண்ட சாலை பணிகளானது பிரதம மந்திரி கிராமப்புற சாலை அமைக்கும் திட்டத்தின் கீழ் டெண்டர் போடப்பட்டுள்ளது. எனவே விரைவில் சாலை பணிகள் தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.