• vilasalnews@gmail.com

ஓட்டப்பிடாரத்தில் இந்து சமய அறநிலை துறை திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் எங்கே? பணியை தொடங்கிய அதிகாரிகள்!

  • Share on

ஓட்டப்பிடாரம் பகுதி இந்து சமய அறநிலை துறை திருக்கோயில் நிலங்களுக்கு எல்லை கற்கள் போடும் பணி தொடங்கியது.

ஓட்டப்பிடாரம் ஆய்வாளர் சரகத்திற்கு உட்பட்ட, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டின் கீழ் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சுமார் 250 ஏக்கர் நிலங்களை தூத்துக்குடி இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அன்புமணி மற்றும் உதவி ஆணையர் செல்வி உத்தரவின்படி , ஓட்டப்பிடாரம் சரக ஆய்வாளரால் நடவடிக்கை எடுக்கப் பட்டு, தனி நபர்கள் ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்கப் பட்டு, திருக்கோயில் சுவாதீனத்திற்கு கொண்டு வரப் பட்டுள்ளது.

மேலும் மேற்படி சரகத்தில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஒட்டப் பிடாரம் சரக ஆய்வாளர் முப்பிடாதி தலைமையில் நில அளவையர் குழுவினரால் அளவீடு செய்யப் பட்டு, தற்போது,  இந்து சமய அறநிலையத் துறை மூலம் மேற்படி நிலங்களில் எல்லை கற்கள் நடும் பணி தொடங்கப் பட்டுள்ளது. மேற்படி நிகழ்வில் ஒப்பந்ததாரர் செல்வம், நில அளவையர் அஜித் ஆகியோர் உடனிருந்தனர்.

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே குப்பனாபுரத்தில் கழட்டி எடுத்துச் செல்லப்பட்ட மின்மாற்றி எங்கே? குறைந்த மின்னழுத்தத்தால் பொதுமக்கள் அவதி!

ஒரு புறம் வகுப்பறையில் பாடம்... மறுபுறம் மைக் செட் போட்டு மக்களுடன் முதல்வர் முகாமா? பள்ளி வளாகத்தில் நடந்த முகாமால் மாணவ மாணவிகள் அவதி!

  • Share on