• vilasalnews@gmail.com

எஸ்ஐ பாலு கொலையில் கைதானவர் மனைவி திடீர் சாவு!

  • Share on

ஏரல் அருகே காவல் உதவி ஆய்வாளர் பாலு கொலை வழக்கில் கைதான மெக்கானிக் மனைவி திடீரென்று இறந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள தீப்பாச்சி பகுதியைச் சேர்ந்தவர் முருகவேல். மெக்கானிக்கான இவர் கொற்கை விலக்கு மெயின் ரோட்டில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது மனைவி செல்வலட்சுமி (27). முருகவேலுக்கு குடி பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

கடந்த 30-ந் தேதி கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த செல்வலட்சுமி விஷம் குடித்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஏரலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு அவர் சிகிச்சை பெற்று மறுநாள் வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் கடந்த 3-ந் தேதி இரவில் செல்வலட்சுமி தனது தந்தை அரிராமஜெயத்திடம், விஷம் குடித்ததால் வாய், வயிற்றில் புண் ஏற்பட்டு உள்ளது என்று கூறினார். உடனடியாக அவரை அரிராமஜெயம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் செல்வலட்சுமி திடீரென்று இறந்தார். இதுகுறித்து ஏரல் போலீசார் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து லட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.

செல்வலட்சுமியின் கணவர் முருகவேல் சமீபத்தில் ஏரல் அருகே காவல் உதவி ஆய்வாளர் பாலுவை லோடு ஆட்டோ ஏற்றி கொலை செய்து கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share on

ஸ்ரீசித்தர் பீடத்தில்; செல்வ வளம் பெருக யாகம் !

புதூர் அருகே வாகன விபத்து - சின்னப்பன் எம்எல்ஏ, விபத்தில் சிக்கியவர்களை உடனிருந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு

  • Share on