• vilasalnews@gmail.com

ஓட்டப்பிடாரம் அருகே குப்பனாபுரத்தில் கழட்டி எடுத்துச் செல்லப்பட்ட மின்மாற்றி எங்கே? குறைந்த மின்னழுத்தத்தால் பொதுமக்கள் அவதி!

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே குப்பனாபுரம் கிராமத்தில் அடிக்கடி குறைந்த மின்னழுத்தம் இருந்து வந்த நிலையில் கிராம பொதுமக்களால் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.


இந்த கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக புதிய மின்மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


அதன் பேரில் குப்பனாபுரம் கிராமத்தில் 63 கே.வி திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு அதிலிருந்து கிராமத்திற்கு குடிநீர் வழங்கும்  மேல்நிலை நீர்த்தேக்க  தொட்டி மற்றும் ஆறு விவசாய தோட்டங்களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.


இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திடீரென மின்மாற்றியை மின்வாரிய ஊழியர்கள் கழட்டி எடுத்துச் சென்று விட்டனர். இதுவரையிலும் மாற்றப்படாமல் மின்கம்பம் மட்டுமே உள்ளது. இதனால் மீண்டும் கிராமத்தில் அடிக்கடி குறைந்த மின்னழுத்தம் ஏற்படுகிறது .


எனவே எடுத்துச் செல்லப்பட்ட மின்மாற்றியை மாற்றுவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

  • Share on

ஒட்டப்பிடாரத்தில் மாணவியர் விடுதி திறப்பு!

ஓட்டப்பிடாரத்தில் இந்து சமய அறநிலை துறை திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் எங்கே? பணியை தொடங்கிய அதிகாரிகள்!

  • Share on