• vilasalnews@gmail.com

ஒட்டப்பிடாரத்தில் மாணவியர் விடுதி திறப்பு!

  • Share on

ஒட்டப்பிடாரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிக் கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று காணொளிக் காட்சி வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி கழகத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிக் கட்டடத்தை திறந்து வைத்தார். 

அதனை தொடர்ந்து, ஒட்டப்பிடாரம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி கட்டடத்தை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, பார்வையிட்டு, குத்துவிளக்கேற்றினார். விழாவில் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் எல்.ரமேஷ், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பெனட் ஆசிர் , தாட்கோ மண்டல செயற்பொறியாளர் பால்ராஜ் வட்டாட்சியர்கள் சுரேஷ், செல்வகுமார், யூனியன் ஆணையாளர் வசந்தா, வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி, ஒன்றிய கவுன்சிலர் சித்ராதேவி சண்முகராஜ், ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன், கிளைச் செயலாளர்கள் கோமதி, முருகன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்கள், பள்ளி மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

மண்டல அளவிலான பூப்பந்தாட்ட போட்டி : ஹோலி கிராஸ் பள்ளி மாணவிகள் சாதனை!

ஓட்டப்பிடாரம் அருகே குப்பனாபுரத்தில் கழட்டி எடுத்துச் செல்லப்பட்ட மின்மாற்றி எங்கே? குறைந்த மின்னழுத்தத்தால் பொதுமக்கள் அவதி!

  • Share on