தூத்துக்குடியில் நடைபெற்ற மண்டல அளவிலான பூப்பந்தாட்ட போட்டிகளில் ஹோலி கிராஸ் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனர்.
தூத்துக்குடி பாரத ரத்னா காமராஜர் பள்ளியில் மண்டல அளவிலான பூப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில், 14 வயதிற்கு உட்பட்ட பிரிவிலும், 17 வயதிற்கு உட்பட்ட பிரிவிலும், 19 வயதிற்கு உட்பட்ட பிரிவிலும் ஒட்டுமொத்தமாக முதலிடத்தை ஹோலிகிராஸ் அங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளி மாணவிகள் பிடித்துள்ளனர்.
14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் இரண்டாம் இடத்தை செயின்ட் தாமஸ் பள்ளி மாணவிகளும், 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் ஏபிசிவி பள்ளி மாணவிகளும், 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் சுப்பையா வித்தியாலயம் பள்ளி மாணவிகள் இரண்டாம் இடத்தை பிடித்தனர். வெற்றி அனைத்து மாணவிகளுக்கும் பரிசுகளும், சான்றிதல்களும் வழங்கப்பட்டது.
இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மாவட்ட விளையாட்டு ஆய்வாளர், உடல்கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள், விளையாட்டு போட்டி நடத்த இடம் அளித்த பாரத ரத்னா காமராஜர் பள்ளி நிர்வாகம் என அனைவருக்கும் ஹோலிகிராஸ் அங்கிலோ இந்தியன் மேல் நிலைப் பள்ளி விளையாட்டு ஆசிரியை சோபியா நன்றி தெரிவித்துள்ளார்.