• vilasalnews@gmail.com

கோயிலுக்குள் புகுந்து திருடிய இருவர் கைது: லோடு ஆட்டோ பறிமுதல்!

  • Share on

கோவில்பட்டி அருகே கோயிலுக்குள் புகுந்து வெண்கலப் பொருள்களைச் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கொப்பம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், கோவில்பட்டி-பசுவந்தனை சாலையில் ஈராச்சி விலக்கு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியே சென்ற லோடு ஆட்டோவிலிருந்து ஒருவர் தப்பித்து ஓடினாராம். அந்த வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் கோயிலில் பயன்படுத்தும் வெண்கலப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.


வாகனத்திலிருந்த ஓட்டுநரான இளம்புவனத்தைச் சேர்ந்த மந்திரம் மகன் பெரியதுரை (25), ஈராச்சி பாப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராஜ் மகன் குமார் (25) ஆகியோர், தெற்கு செமப்புதூரில் உள்ள ஸ்ரீ மாடசுவாமி கோயிலின் சுற்றுச்சுவர் வழியாக கோயிலுக்குள் புகுந்து, சுமார் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான வெண்கலப் பொருள்களை திருடிச் செல்வதாக, விசாரணையில் தெரியவந்தது.


இதையடுத்து போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, வெண்கலப் பொருள்கள், லோடு ஆட்டோ ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். வாகனத்திலிருந்து தப்பியோடிய ரெங்கசாமியைத் தேடி வருகின்றனர். 

  • Share on

கோவில்பட்டியில் மினிபஸ்களில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தினை விட அதிக கட்டணம் வசூல் : மினிபஸ்சை மறித்து போராட்டம்!

மண்டல அளவிலான பூப்பந்தாட்ட போட்டி : ஹோலி கிராஸ் பள்ளி மாணவிகள் சாதனை!

  • Share on