• vilasalnews@gmail.com

குமரெட்டியாபுரம் கிராமத்தில் வேப்ப மரங்கள் நடுவது குறித்து பொதுமக்களுடன் மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆலோசனை!

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே குமரெட்டியாபுரம் கிராமத்தில் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பாக விளைநிலங்களில் வேப்ப மரங்கள் நடுவதற்கு கிராம விவசாய மக்களுடன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டையன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

மேலும் வேப்ப மரத்தின் மூலம் விவசாயம் செய்வதற்கு ஆலோசனை  வழங்கினார். கிராம சாலையின் இரு புறமும் மரங்களை வளர்த்துள்ள சாலை ஆய்வாளர் கதிரேசனுக்கு இயற்கை ஊக்குவிப்பாளர் விருதினை  எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார். இந்நிகழ்வில் ஓட்டப்பிடாரம் யூனியன் துணை சேர்மன் காசி விசுவநாதன், மரங்கள் மக்கள் இயக்கம் நிர்வாக இயக்குனர் ராகவன், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, தூத்துக்குடி வடக்கு மாவட்டம் முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

சாத்தான்குளம் அருகே ஒளிரும் பிரதிபலிப்பான்கள் திருட்டு : 3பேர் கைது!

கோவில்பட்டியில் மினிபஸ்களில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தினை விட அதிக கட்டணம் வசூல் : மினிபஸ்சை மறித்து போராட்டம்!

  • Share on