சாத்தான்குளம் அருகே ரூ.2லட்சம் மதிப்புள்ள சாலையில் அமைக்கப்படும் ஒளிரும் பிரதிபலிப்பான்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், சின்னூர் பகுதியைச் சேர்ந்தவர் கலைசெல்வம் மகன் ராஜரத்தினம் (40) இவர் நெடுஞ்சாலை வேகத்தடை அருகே ஒளிரும் பிரதிபலிப்பான் அமக்கும் பணியை ஒப்பந்தம் எடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை ரோட்டில் அமைப்பதற்காக வைத்திருந்த 942 பிரதிபலிப்பான்கள் மற்றும் அதை ஒட்டும் பசை ஆகியவற்றை அவரிடம் பணிபுரியும் 3பேர் திருடி சென்று விட்டார்களாம்.
இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இது குறித்து அவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் எட்வின் அருள்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கும்பகோணத்தை சேர்ந்த தியாகராஜன் மகன் குருவை (52), புதுக்கோட்டை வெள்ளூரை சேர்ந்த கருப்பையா மகன் குமரேசன் (48), ராஜேந்திரன் மகன் அறிவழகன் என்ற அஜித்குமார் (29) ஆகிய 3 பேரையும் கைது செய்து அவரிடமிருந்து பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.