தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்திற்கு உட்பட்ட சாலைகளில் நடைபெற்று வந்த சுமார் 10 கோடி மதிப்பிலான தற்காலிக சீரமைப்பு பணியையும், ரூ 14.45 கோடி மதிப்பிலான நிரந்தர சீரமைப்பு பணியும் முடிவுற்ற நிலையில், அப்பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில், உதவி கோட்ட பொறியாளர் ராஜபாண்டி, இளநிலை பொறியாளர் சார்லஸ் பிரேம்குமார், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.