சாத்தான்குளம் ஒன்றியம் பள்ளங்கிணறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நடைபெற்றது.
மறு கட்டமைப்பை பள்ளி தலைமை ஆசிரியை லதா தலைமை ஏற்று ஒருங்கிணைப்பு செய்திருந்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஆக கண்ணகி, துணைத் தலைவராக வள்ளியம்மாள் ஆகியோர் உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர், துணைத் தலைவர் உட்பட 24 பேர் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்க பட்டனர். மறு கட்டமைப்பில் உள்ளாட்சி பிரதிநிதி, இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர், பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். மறு கட்டமைப்பினை சாத்தான்குளம் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் அருண்குமார் பார்வையிட்டார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். பள்ளியின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவதாக உறுப்பினர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். உதவி ஆசிரியர் பச்சி ராஜன் நன்றி கூறினார்.