தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனையில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு பதிவேற்றம் செய்யப்படுவதையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணை, வண்டல் மண் எடுப்பதற்கான ஆணை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரி, வசந்தா, ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜேஸ்வேல், வெள்ளைச்சாமி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் லட்சுமிசிதம்பரம், சுந்தரிகணேசன், மாரியப்பன், மகேஸ்வரி சுடலைமணி, பிரியாசெல்வகுமார், முத்துக்குமார், சண்முகையா, தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் முத்துராஜ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.