• vilasalnews@gmail.com

சாத்தான்குளத்தில் கண்காணிப்பு கேமராவை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர் : போலீசார் விசாரணை!

  • Share on

சாத்தான்குளத்தில்  கண்காணிப்பு  கேமராவை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபரை போலீஸார் தேடிவருகின்றனர்.


சாத்தான்குளம் பகுதியில் திருட்டு மற்றும் குற்றசெயல்கள் நடைபெறுவதை தடுக்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் பல்வேறு இடங்களில் மொத்தம் 64 கண்காணி்ப்பு  கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சாத்தான்குளம் பஜார் இறைச்சிகடை அருகில் பொருத்தப்பட்டிருந்த  கண்காணிப்பு கேமரைவை மர்மநபர் உடைத்து சேதப்படுத்தி உள்ளார். மேலும், கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்திய அந்த மர்மநபர் உருவம், அப்பகுதியில் உள்ள மற்றொரு  கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து கென்னடி என்பவர் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

சாத்தான்குளம் அருகே பருத்தி மூடைகள் திருட்டு : ஒருவர் கைது; மற்றொருவருக்கு போலீஸ் வலைவீச்சு!

சாத்தான்குளம் அருகே 50 வயது மதிக்கத்தக்க நபர் மர்மமான முறையில் உயிரிழப்பு - போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை!

  • Share on