சாத்தான்குளம் அருகே வியாபாரி வீட்டில் பருத்தி மூடைகளை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.
சாத்தான்குளம், கல்விநகரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ராகுல்(32). இவர் வியாபாரிகளிடம் பருத்தி மற்றும் நெல் கொள்முதல் செய்து வியாபாரம் செய்துவருகிறார்.இதையொட்டி வீட்டின் அருகில் பருத்தி மூடைகளை அடுக்கிவைத்திருந்தார். இந்நிலையில் வீட்டின் அருகில் வைத்திருந்த தலா 45 கிலோ எடைகொண்ட 4 பருத்தி மூடைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இதன்மதிப்பு ரூ.12 ஆயிரம் ஆகும். இதுகுறித்து ராகுல் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், சாத்தான்குளம் அமுதுண்ணாகுடியை சேர்ந்த நீலகுமார் மகன் அரவிந்தன்(20) மற்றும் முதலூரை சேர்ந்த சரவணன் ஆகிய இருவரும் சம்பவத்தன்று பருத்தி மூடைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அரவிந்தனை கைது செய்தனர். மேலும் அவரது கூட்டாளியான சரவணனை தேடிவருகின்றனர்