• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் அஜித் ரசிகரான தீனா என்ற ஜெகனை கொலை செய்த வழக்கு : இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு!

  • Share on

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண் II நீதிபதி உதயவேலன்  ஆயுள் தண்டனை மற்றும்  ரூபாய் 10,500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்


 கடந்த 17.02.2013 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி கிருபை நகர் ஜங்ஷன் பகுதியில் வைத்து தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ஜெகன் (25/2013)  என்பவரை முன் விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி கணேஷ் நகரை சேர்ந்த கருப்பசாமி மகன் கதிரேசன் (31) மற்றும் தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியைச் சேர்ந்த பலவேசமுத்து மகன் பொன்பாண்டி (31) ஆகியோரை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கை அப்போதைய தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் குருநாதன் புலன் விசாரணை செய்து கடந்த 30.04.2013 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.


இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கதிரேசன் என்பவர் பிணையில் வந்த போது மற்றொரு முன்விரோதம் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை செய்யப்பட்டார்.


மேலும் இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண் IIல்  நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி  உதயவேலன், இன்று (10.08.2024) குற்றவாளியான பொன்பாண்டி என்பவருக்கு ஆயுள் தண்டனை ரூபாய் 10,500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் குருநாதன் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் அருண்சுந்தர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  பாராட்டினார்.

  • Share on

விளாத்திகுளம் அருகே பள்ளிக்குச் சென்ற மாணவன் உயிரிழப்பு : போலீசார் விசாரணை!

சாத்தான்குளம் அருகே பருத்தி மூடைகள் திருட்டு : ஒருவர் கைது; மற்றொருவருக்கு போலீஸ் வலைவீச்சு!

  • Share on