• vilasalnews@gmail.com

ஓட்டப்பிடாரம் வட்டார விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தில் உதவித்தொகை பெற வேண்டுமா? அப்படினா இதை மறக்காம செய்யுங்க!

  • Share on

ஓட்டப்பிடாரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூபாய் 2000 வீதம் ஆண்டுக்கு ரூபாய் 6000 வேளாண் இடுபொருள்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை பிஎம் கிசான் திட்டத்தில் சேர்ந்த தேதியை பொறுத்து விவசாயிகளுக்கு 17 தவணை வரை தொகைகள் வரப்பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தில் விவசாயிகள் eKYC என்கிற இணையத்தில் பதிவு செய்து செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் தொடர்ந்து தவணை தொகை பெறுவதற்கு தங்கள் ஆதார் விவரங்களை சரிபார்ப்பு செய்வது அவசியமாகும். எனவே இதுகுறித்து அருகாமையில் உள்ள சேவை மையத்திலோ அல்லது அஞ்சல் அலுவலகத்தையோ அணுகி  eKYC செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் தங்களது ஆதார் எண்ணுடன்  கைபேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பிஎம் கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து OTP மூலம் சரிபார்ப்பு செய்யலாம்.

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பிஎம் கிசான் திட்ட பயனாளிகள் மேற்காணும் ஏதேனும் ஒரு முறையில் தங்களது ஆதார் விவரங்களை உடனடியாக பிஎம் கிசான் திட்ட வலைதளத்தில் பதிவு செய்து தொடர்ந்து 18 ஆவது தவணைத்தொகையை பெறுவதை உறுதி  செய்து  கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

  • Share on

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தருவைகுளம் மீனவர்களின் குடும்பத்தினருக்கு சண்முகையா எம்எல்ஏ நேரில் ஆறுதல்!

விளாத்திகுளம் அருகே பள்ளிக்குச் சென்ற மாணவன் உயிரிழப்பு : போலீசார் விசாரணை!

  • Share on