• vilasalnews@gmail.com

கார் டயர் வெடித்து விபத்து : மூதாட்டி உயிரிழப்பு;சிறுவன் உள்பட 2 பேர் காயம்!

  • Share on

கோவில்பட்டி அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உயிரிழந்தார். சிறுவன் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். 


நெல்லையை சேர்ந்த நாராயணன் மகன் அருணகிரி (37). இவருடைய தாயார் வனஜாவிற்கு மருத்து பரிசோதனைக்காக மதுரைக்கு தனது காரில் அருணகிரி அழைத்துச் சென்றுள்ளார். மேலும் அவரது 10 வயது மகனையும் உடன் காரில் அழைத்துச் சென்றுள்ளார். கார் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் பகுதியில் வந்த போது திடீரென முன்பக்க டயர் வெடித்து கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 


இதில் வனஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த அருணகிரி, அவரது 10 வயது மகன் ஆகியோர் காயமடைந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் நாலாட்டின்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் உயிரிழந்த வனஜா உடலை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தருவைகுளம் மீனவர்களை மீட்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக மனு... மீனவர்கள் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல்!

சின்னவநாயக்கன்பட்டி இந்து நாடார் ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய உணவு திருவிழா!

  • Share on