• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் கடல் அட்டைகளை கடத்தியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு!

  • Share on

தூத்துக்குடியில் கடல் அட்டைகளை கடத்திய வழக்கில் ஒருவருக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதி தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் ( 46 ). இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தூத்துக்குடி மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை கடத்தி வந்தார். அவர் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி ஜே.எம். எண் 2 கோர்ட்டில் நடந்தது. வழக்கை நீதிபதி கனிமொழி விசாரித்தார். வழக்கில் குற்றம் தட்டப்பட்ட ராஜேந்திரனுக்கு ஓராண்டு சிறை தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்

  • Share on

சாத்தான்குளம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அதிகாரிகள் வருகை தாமதத்தால் காத்திருந்து அவதிக்குள்ளான பொதுமக்கள்!

எப்போதும் வென்றான் அருகே வேன் கவிழ்ந்து விபத்து!

  • Share on