சாத்தான்குளம் அருகே மகன் இறந்த துக்கத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சின்னச்சாமி மனைவி பஞ்சவர்ணம் (45). இவரது கணவர் கடந்த 18ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். இந்நிலையில் இவரது ஓரே மகன் வசந்தகுமார், கடந்த 6 மாதத்திற்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. . இதனால் தாய் பஞ்சவர்ணம், மகன் தற்கொலை செய்து இடத்தை பார்த்து மிகவும் வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இதனை பார்த்த அவரது சகோதரர் ராமசந்திரன் அவரது வீட்டிற்கு அழைத்து சென்று பஞ்சவர்ணத்தை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை பஞ்சவர்ணம், அவரது வீட்டிற்கு சென்று விஷ மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து ராமச்சந்திரன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.