தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், சிவஞானபுரம் ஊராட்சியில் சக்கம்மாள்புரம், சிவஞானபுரம், கே.குமரெட்டையாபுரம், அருங்குளம், அ.சுப்பிரமணியபுரம், வெள்ளையம்மாள்புரம், அயன்செங்கல்படை, நமச்சிவாயபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகளுக்கு மற்றும் வீடு பராமரிக்கும் பயனாளிகளுக்கு வேலை உத்தரவு ஆணையை வழங்கினார்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், ஸ்ரீனிவாசன், வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் , சமூகப்பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் விமலா, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் அன்புராஜன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.