• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் கல்லூரியில் தமிழ்ப் புதல்வன் திட்ட வங்கி கணக்கு அட்டை வழங்கும் விழா : மார்க்கண்டேயன் எம்எல்ஏ பங்கேற்பு!

  • Share on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (09.08.2024) கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாட்டு மாணவர்கள் தரணியை வென்றிட, உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி (தமிழ்வழி) மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார். 


அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன்  தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வங்கி கணக்கு அட்டையை வழங்கினார். 


இந்நிகழ்வில், கல்லூரி முதல்வர் (பொறுப்பு) குமாரி, விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன்,  விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பேராசிரியர்கள், பேராசிரியைகள், மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

  • Share on

நாகம்பட்டி கல்லூரியில் தமிழ்ப் புதல்வன் திட்ட வங்கி கணக்கு அட்டை வழங்கும் விழா!

சிவஞானபுரம் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் : மார்க்கண்டேயன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!

  • Share on