தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (09.08.2024) கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாட்டு மாணவர்கள் தரணியை வென்றிட, உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி (தமிழ்வழி) மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதனைதொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் இன்று நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு அரசின் தமிழ்ப் புதல்வன் திட்ட வங்கி கணக்கு அட்டை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந் நிகழ்ச்சியில், வணிகவியல் துறைத் தலைவர் வினோத், கல்லூரி முதல்வர் ராமதாஸ் , ஒன்றியக் கவுன்சிலர் ராஜேஷ் , தமிழ்த் துறைத் தலைவர் சேதுராமன், கணிதவியல் தலைவர் செல்வி, வணிக நிர்வாகவியல் தலைவர் சிவசுப்பிரமணியன் மற்றும் உடற்கல்வி இயக்குநர் கணேசன், தமிழ்த் துறை பேராசிரியர் முனைவர் பவானி, முனைவர் சித்ராதேவி, மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.