ஓட்டப்பிடாரம் அருகே சந்திரகிரி ஊராட்சி கீழ செய்தலை கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணியாளருக்கான அட்டை வைத்துள்ளனர். இவர்களுக்கு சுமார் மூன்று மாத காலமாக முறையாக வேலை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும் தினசரி 10 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணியாளருக்கான அட்டை வைத்துள்ள அனைவருக்கும் முறையாக வேலை வழங்கக்கோரி ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாய சங்க தாலுகா குழு உறுப்பினர் மொட்டையசாமி, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராகவன், மாவட்ட செயலாளர் புவிராஜ் , ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஒன்றிய பொருளாளர் வேல்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சண்முகராஜ் மற்றும் நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.