குலசேகரநல்லூர், ஆரைகுளம், எஸ்.கைலாசபுரம், கீழமங்கலம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களுக்காக குலசேகரநல்லூர் சமுதாய நலக்கூடத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களின் மனுக்களை பதிவேற்றம் செய்யப்படுவதையும் பார்வையிட்டு விவசாயிகளுக்கு கரம்பை மண் அள்ளுவதற்கான ஆணைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .
இந்நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் சுரேஷ், நில எடுப்பு வட்டாட்சியர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி, ஓட்டப்பிடாரம் வட்டார வேளாண்மை அலுவலர் சிவகாமி மத்திய கூட்டுறவு வங்கி கள மேலாளர் பால்சாமி, கூட்டுறவு சார்பதிவாளர் பாலமுருகன், பஞ்சாயத்து தலைவர்கள் வேலாயுத சாமி, சங்கரி, செல்வம் ஜெயந்தி, செல்வராஜ், ஜெபக்கனி மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோல் கலந்து கொண்டனர்.