• vilasalnews@gmail.com

அரை நூற்றாண்டு கால கோரிக்கை : விளாத்திகுளம் யூனியன் சேர்மன் நிறைவேற்றி கொடுத்த மகிழ்ச்சியில் படந்தபுளி மக்கள்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள படர்ந்தபுளி கிராமத்தில் பாலம் இல்லாததால் மழைக்காலங்களில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரும் சிரமத்திற்கிடையே சென்று வருவதால் அங்கு பாலம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். 


இந்த நிலையில், ‌விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன், படர்ந்தபுளி கிராம மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்து, படர்ந்தபுளி கிராமத்தில் பாலம் கட்டுவதற்கு இன்று பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் ஒப்பந்ததாரரிடம் மழைக்காலம் வருவதற்கு முன்பாகவே பாலத்தை விரைவாக கட்டி முடிக்க வேண்டும் என்று யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.


இந்நிகழ்வில், ஊராட்சி மன்ற தலைவர் சோலை ராஜ், துணைத் தலைவர் கிருஷ்ணசாமி, ஊர் தலைவர் கருப்பசாமி, ஒப்பந்ததாரர் ஜெயபால், அதிமுக கட்சி பேச்சாளர் இளங்கோ, கவுன்சிலர் ஆண்டாள் உட்பட கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் கோவில் கொடை விழா ஊர்வலத்தின் போது பிரச்சனை : தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 7 பேர் கைது!

குலசேகரநல்லூரில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் : சண்முகையா எம்எல்ஏ நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!

  • Share on