கடந்த 07.08.2024 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னகண்ணுபுரம் பகுதியில் நடந்த கோயில் கொடை விழா முளைப்பாரி ஊர்வலத்தின் போது சின்னகண்ணுபுரம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் ஆனந்தராஜ் (24) என்பவர் வானவேடிக்கை வெடித்ததில் அதே பகுதியைச் சேர்ந்த அய்யாசாமி மகன் தங்கதுரை (70) என்பவருக்கு காயம் ஏற்பட்டதையடுத்து தங்கதுரை மற்றும் ஆனந்தராஜ் ஆகியோருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆனந்தராஜ் அவரது சகோதரர்களான ஆதி (22), ராமகிருஷ்ணன் (33) மற்றும் சின்னகண்ணுபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான கணேசன் மகன்கள் பத்திரகாளிதாஸ் (28), ராஜதுரை (23), இருதயராஜ் மகன்களான விக்னேஷ் (25), மாரிமகேஷ் (22) ஆகியோர் மற்றும் சிலருடன் சேர்ந்து தங்கதுரையின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தங்கதுரை, அவரது மனைவி மற்றும் அவரது மகன் சக்திவேல் (34) ஆகியோரிடம் தகராறு செய்து, தவறாக பேசி கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தங்கதுரை நேற்று அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவராஜா வழக்கு பதிவு செய்து ஆனந்தராஜ், ஆதி, ராமகிருஷ்ணன், பத்திரகாளிதாஸ், ராஜதுரை, விக்னேஷ், மாரிமகேஷ் ஆகிய 7 பேரை கைது செய்தார். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.