கொம்பன்குளம் கிராமம் துவர்க்குளத்தில் இருந்து சாத்தான்குளம் இணைப்பு சாலை வரை செல்லும் சாலை கடந்த 20 ஆண்டு காலமாக பழுதடைந்து சாலையே இல்லாத நிலையில் இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வயல்வெளி வழியாக மண் சாலையில் சென்று வந்தனர்.
இந்நிலையில், சாத்தான்குளம் ஒன்றிய திமுக கவுன்சிலர் ப்ரெனிலா கார்மல் போனிபாஸ் மூலமாக கடந்த நான்கு ஆண்டு காலமாக தொடர்ந்து இந்த சாலையை சீரமைத்து புதுப்பித்து தருமாறு மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் , பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எம்பியிடமும் தொடர்ந்து மனு கொடுத்து சாலையை சீரமைத்து தருமாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எம்பின் மேல் நடவடிக்கையால் முதல்வரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் 71 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் துவர்குளத்தில் இருந்து சாத்தான்குளம் சாலை வரும் செல்லும் சாலை சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த சாலை ஆனது தார் சாலை போடும் பணி ஒன்றிய கவுன்சிலர் சார்பாக சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் வழக்கறிஞர் போனிபாஸ் மற்றும் ஊர் பொதுமக்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.