• vilasalnews@gmail.com

மதுரை மாவட்ட கிராமிய கலைக்குழு இளைஞருக்கு தூத்துக்குடியில் நேர்ந்த சோகம்!

  • Share on

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா சக்கரப்ப நாயக்கனூர் சுந்தரம் மகன் பெத்தனசாமி ( எ ) ஜீவா ( 23 ).

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் கொடை விழாவிற்கு தப்பாட்டம் அடிப்பதற்கு வந்த இவர் கோவில் முன் தப்பாட்ட மேளம் அடித்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே சரிந்தார். உடனடியாக அவரை உடன் வந்தவர்கள் மீட்டு உடன்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து அவரது உடலை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது உறவினர் பாண்டி அளித்த புகாரின் பேரில் குலசேகரப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

குளத்தூர் அருகே சட்டவிரோதமாக சரள் மண் அள்ளிய 7 பேர் கைது : 3 டிராக்டர்கள் பறிமுதல்!

திருச்செந்தூரில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி - நகர் மன்ற துணைத்தலைவர் ஏ.பி.ரமேஷ் துவக்கி வைத்தார்!

  • Share on