• vilasalnews@gmail.com

குளத்தூர் அருகே சட்டவிரோதமாக சரள் மண் அள்ளிய 7 பேர் கைது : 3 டிராக்டர்கள் பறிமுதல்!

  • Share on

குளத்தூர் அருகே சட்ட விரோதமாக சரள் மண் அள்ளியதாக ஏழு பேரை கைது செய்த போலீசார், மணல் அள்ள பயன்படுத்திய மூன்று டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா மற்றும் போலீசார் சம்பவத்தன்று இரவு வைப்பார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது துலுக்கன் குளம் கல்லாறு அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி செம்மண் கலந்த கரம்பை மணலை சிலர் 3 டிராக்டர்களில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அதனையடுத்து சரள் மண்ணை திருடியதாக டிராக்டர் உரிமையாளர் பட்டினமருதூரை சேர்ந்த சங்கரலிங்கம் ( 25 ), அவரது தம்பி டிரைவர் மாரிச்செல்லம் ( 20), டி. துரைச்சாமிபுரத்தை சேர்ந்த டிரைவர் செல்வராஜ் ( 20 ), அதே பகுதி பசுங்கிளி ( 23 ), சுப்பிரமணியபுரம் சுப்பிரமணி ( 50 ), கோட்டநத்தம் கோட்டை பாண்டி ( 50 ), அவரது மகன் டிராக்டர் உரிமையாளர் கார்த்திக் ( 23 ), ஆகிய ஏழு பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தலா 3/4  யூனிட் மணல் மற்றும் மூன்று டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

  • Share on

சாத்தான்குளத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி பொதுமக்கள் தவிப்பு : பாஜக தலைவர் சித்ராங்கதன் கண்டனம்

மதுரை மாவட்ட கிராமிய கலைக்குழு இளைஞருக்கு தூத்துக்குடியில் நேர்ந்த சோகம்!

  • Share on