• vilasalnews@gmail.com

சாத்தான்குளத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி பொதுமக்கள் தவிப்பு : பாஜக தலைவர் சித்ராங்கதன் கண்டனம்

  • Share on

சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதியில் பஸ், குடிநீர், சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாமல் அரசு  வஞ்சித்து வருவதாக தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சார்ந்த பொதுமக்களுக்கு பேருந்து, குடிநீர், சாலை, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தொடர்ச்சியாக வஞ்சிப்பதால் இப்பகுதியைச் சார்ந்த மக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். 

போக்குவரத்துதுறையை பொறுத்தவரையில் சாத்தான்குளம், முதலூர்,,தட்டார்மடம், மணிநகர், சுண்டங்கோட்டை, பெரியதாழை வழியாக இயக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துகள் தற்போது இயக்கப்படுவது இல்லை. மேலும் புத்தன்தருவை, தச்சன்விளை வழியாக திசையன்விளை செல்லக்கூடிய அரசு பேருந்துகளும் தற்போது இயக்கப்படுவது இல்லை. அதேபோல் கோமாநேரி, கொம்பன்குளம், நெடுங்குளம், புதுக்குளம், அமுதுண்ணாக்குடி வழியாக சாத்தான்குளத்தில் இருந்து திருநெல்வேலிக்கும், திருநெல்வேலியிலிருந்து சாத்தான்குளத்திற்கும் காலை நேரத்திலும், இரவு நேரத்திலும் கல்லூரி மாணவ மாணவிகளுக்காகவும், பொதுமக்களுக்காகவும் பேருந்து வசதி ஏற்படுத்தி தரக்கோரி பலமுறை கோரிகைவிடுத்தும் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்க முன்வரவில்லை. அதேபோல் சாத்தான்குளம் பேருந்து நிலையத்தின் புதிய கட்டுமானப் பணியானது இதுவரையில் துவங்கப்படாமல் அப்படியே கிடப்பில்  போடப்பட்டுள்ளது.  அமுதுண்ணாங்குடி கிராமத்திற்கு ஆற்றுப்பாலம் கட்டப்படாமல் உள்ளதால், ஒவ்வொரு  மழைகாலங்களிலும் இக்கிராமம் துண்டிக்கப்பட்டு தனித்தீவுபோல் ஆகிவிடுகிறது. இந்த ஆற்றுபாலத்தை கட்டுவதற்கு நிதிஒதுக்காமல் நெடுஞ்சாலைத்துறையானது தேவையற்ற பகுதியில் தடுப்புச்சுவர் (ரீட்டெயினிங் வால்) அமைப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது. கிடட் த்தட்ட 24 கிராம பஞ்சாயத்துக்களையும் ஒரு பேரூராட்சியையும் உள்ளடக்கிய  சாத்தான்குளம் தாலுகாவில் செயல்பட்டுவரும் மருத்துவமனையில் மகப்பேறு பிரிவிற்கு மருத்துவர்கள் நியமிக்கப்படாததால் பிரசவ காலங்களில் கர்ப்பிணி பெண்களை திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவலநிலை தொடர்கிறது.  அதேபோல் நிரந்தர முழுநேர மருத்துவர்கள் நியமிக்கப்டாமலே உள்ளது. இம்மருத்துவமனையில் போதிய அளவில் மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் சிகிச்சை பெற வருவோர்கள் மிகுந்த துன்பத்திற்குள்ளாகின்றனர். விவசாயிகள் பயன்பெறும் விதமாக சாத்தான்குளம் பகுதியில் கொண்டுவரப்பட்ட வௌளநீர் கால்வாய் திட்டம் முழுமையாக நிறைவுபெறாமலும். வெள்ளநீர் கால்வாய் எந்தெந்த குளங்களோடு இணைக்கப்படும் என்ற சரியான தகவல்களை விவசாயிகளிடம் தெரிவிக்காமல் குழப்பத்தை விளைவிக்கும் வகையில் அபப் டியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அதேபோல் மின்ஊழியாக்ளுக்கான காலி பணி இடங்கள் சாத்தான்குளம் பகுதியில் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் அடிக்கடி ஏற்படும் மின்தடையினை சரிசெய்வதற்கு காலதாமதம் ஆவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட உடன்குடி - சாத்தான்குளம்  கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு பிறகு இதுவரையில் கூடுதலாக குடிநீர் சம்பந்தமாக எந்தவித திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. இதனால், சாத்தான்குளம் பகுதி மக்கள் தங்களில்  குடிநீர் தேவையை பூர்த்தி செய்யமுடியாமல் தவித்து வருகின்றனர்.  இதுதொடர்பாக சாத்தான்குளம் பகுதியைச் சார்ந்த ஊராட்சி தலைவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கைகளும் இல்லை. இவ்வாறாக சாத்தான்குளம் பகுதிமக்களின் அடிப்படை தேவைகளை கூட செய்து  தாராமல் தொடச்சியாக சாத்தான்குளம் பகுதியை வஞ்ச்சித்து வரும் தமிழக அரசையும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தையும் பாஜக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் இந்த நிலை நீடிக்குமேயானால் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்  நடத்தப்படும்  என அவர் தெரிவித்துள்ளார்.

  • Share on

பனைவிளை பள்ளி தலைமை ஆசிரியர் மீது இந்து மகா சபா நிர்வாகிகள் வட்டார கல்வி அலுவலரிடம் புகார்!

குளத்தூர் அருகே சட்டவிரோதமாக சரள் மண் அள்ளிய 7 பேர் கைது : 3 டிராக்டர்கள் பறிமுதல்!

  • Share on