பனைவிளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளி நலனுக்கு எதிராக செல்வதாக இந்து மகா சபா நிர்வாகிகள், சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலரிடம் இன்று வியாழக்கிழமை புகார் அளித்தனர்.
தமிழ்நாடு இந்து மகா சபா தலைவர் ஆர். எஸ். சுந்தரவேல் தலைமையில் கிராம மக்கள் இன்று வியாழக்கிழமை சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலகததிற்கு வட்டார கல்வி அலுவலரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். அம் மனுவில், சாத்தான்குளம் ஒன்றியம் பனைவிளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். பள்ளி மற்றும் மாணவர்கள் நலனுக்காக செயல்படாமல் இருந்து வருகிறார். இவரது செயல்பாட்டில் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குலசேகரபட்டினம் தசரா விழாவின் போதும், ஊர் கோயில் கொடை விழாவின் போதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கையில் அணியும் திருக்காப்பையும், தமிழர்களின் பாராமரியத்தையும் இழிவு செய்து வருகிறார். ஆகையில் அவர் மீது நடவடிக்கை எடுத்து வேறு பள்ளிக்கு பணி மாற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்ற வட்டார கல்வி அலுவலர், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.