டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் மாநகர காங்கிரஸ் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள விவசாய திருத்த சட்டங்களை கைவிடக் கோரியும், டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது அடக்கு முறையை கண்டித்தும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவின் பேரில், தூத்துக்குடியில் பாளை., ரோடு பழைய பேருந்து நிலையம் முன்பு
மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில், மாநகர மாவட்ட தலைவர் சிஎஸ்.முரளிதரன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மறியலில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுடலையாண்டி, மண்டல தலைவர் தனலெட்சுமி, எஸ்சி,எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் ராஜாராம், மாநகர துணை தலைவர் பிரபாகரன், பொதுச் செயலாளர் கே.டி.எம் ராஜா, வார்டு தலைவர்கள் சித்திரை பால்ராஜ், கோபி, அம்பிகாபதி, மாரியப்பன், சிவக்குமார், கிருஷ்ணன், முத்துராஜ், பொதுக்குழு உறுப்பினர் சவரியானந்தம்,
மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் நீலா, கமலம், வள்ளிதங்கம், பேச்சியம்மாள், வனிதா, லதா, ஈஸ்வரி, தங்ககனி, சசி, காசி என்ற ராஜன், செந்தூர் செல்வம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை மத்தியபாகம் போலீசார் கைது செய்தனர்.