• vilasalnews@gmail.com

சாத்தான்குளத்தில் குடிநீர் பிரச்னைக்கு 7 நாளில் தீர்வு காண நடவடிக்கை - பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்!

  • Share on

சாத்தான்குளத்தில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு 7 நாளில் தீர்வு காண போர்க்கால நடவடிக்கை எடுப்பது என பேரூராட்சி மன்ற அவசர கூட்டத்தில்  தீர்மானிக்கப்பட்டது. 

சாத்தான்குளம் பேருராட்சியில்  மக்களுக்கு குடிநீர் முறையாக கிடைக்கவில்லையெனவும், வார்டு பகுதியில் தேவைக்கு தண்ணீர் வழங்கும் வகையில் அமைக்கப்பட்ட குடிநீர்  தொட்டி பயன்பாட்டுக்கு வரப்படாமல் உள்ளதென  பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் சாத்தான்குளம் பேரூராட்சி மன்ற அவசரக் கூட்டம் இன்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவி ரெஜினி ஸ்டெல்லாபாய் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மாரியம்மாள், செயல் அலுவலர் (பொறுப்பு) உஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேரூராட்சி 15 வார்டு தெருகளிலும் நிலவும் குடிநீர் பிரச்சனையை போர்க்கால அடிப்படையில் 7 நாளில் தீர்வு காண நடவடிக்கை எடுப்பது. வடக்குதெரு, குலசை ரஸ்தா, வடக்கு ரத வீதி, தச்சமொழி நாடார்  தெரு, அழகம்மன் தெரு, அப்பாவு நாடார் தெரு, இட்டமமொழி ஆகிய பகுதியில் குடிநீர்  பற்றாக்குறையை நீக்கி சீரான குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுப்பது. காமராஜநகரில் உள்ள பைப்லைனில் இருந்து இட்டமொழி ரோடு நெடுஞ்சாலைத்துறையில் அனுமதி பெற்று பிள்ளையார் கோவில்  அருகில் உள்ள மெயின் பைப்பில் இணைப்பது. பேரூராட்சி பொது நிதியில் மினி தண்ணீர் தொட்டி 15வார்டுகளில்  கட்டப்பட்டு முடிவடைந்த நிலையில் உள்ளது. அதில் 10  தெருகளில்  உள்ள  மினி தண்ணீர் தொட்டிக்கு மின் இணைப்பு பெற்று உடனடியாக  திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பது என தீர்மானிக்கப்பட்டது. 

கூட்டத்தில், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சுந்தர், ஜோதி கிறிஸ்துமஸ், ஜோசப் அலெக்ஸ், ஜோசப், ஜான்சிராணி, ஸ்டேன்லி, லிசா, இந்திரா, மகாராஜா,  கற்பகவள்ளி, லிங்கபாண்டி, மகேஸ்வரி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  • Share on

சாத்தான்குளத்தில் இருந்து வேளாங்கண்ணி சென்ற முதியவர் மாயம் - போலீஸார் விசாரணை!

பனைவிளை பள்ளி தலைமை ஆசிரியர் மீது இந்து மகா சபா நிர்வாகிகள் வட்டார கல்வி அலுவலரிடம் புகார்!

  • Share on