• vilasalnews@gmail.com

சாத்தான்குளத்தில் இருந்து வேளாங்கண்ணி சென்ற முதியவர் மாயம் - போலீஸார் விசாரணை!

  • Share on

சாத்தான்குளத்தில் இருந்து வேளாங்கண்ணி  சென்ற முதியவர் மாயமானது குறித்து தட்டார்மடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் நவமுதலூர் தெருவைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் (84).  இவருக்கு இரண்டு மகன் , ஒரு மகள் உள்ளனர்.  தற்போது முதலூரில் உள்ள மகள் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 22ஆம்தேதி  வேளாங்கண்ணிக்கு சென்று வருவதாக கூறி சென்றார். அதன்பின் வீடு திரும்ப வில்லையாம். அவர் எங்கு சென்றார் எனவும், தடுமாறி வேறு பகுதிக்கு சென்றுவிட்டாரா என்பதும்  தெரியவில்லை.      

இதுகுறித்து அவரது பேரன் அண்டோ அருண் ரஞ்சித் தட்டார்மடம்  காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் அனிதா வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்.

  • Share on

சாத்தான்குளம் அருகே தொழிலாளியை கார் ஏற்றி கொல்ல முயன்ற இளைஞர் நெல்லையில் கைது!

சாத்தான்குளத்தில் குடிநீர் பிரச்னைக்கு 7 நாளில் தீர்வு காண நடவடிக்கை - பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்!

  • Share on