• vilasalnews@gmail.com

சாத்தான்குளம் அருகே தொழிலாளியை கார் ஏற்றி கொல்ல முயன்ற இளைஞர் நெல்லையில் கைது!

  • Share on

சாத்தான்குளம் அருகே தொழிலாளியை  கார் ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் தேடப்பட்ட இளைஞர்  நெல்லையில் நேற்று புதன்கிழமை  போலீசார் கைது செய்தனர்.

சாத்தான்குளம் அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் குமார் மகன் சுப்பிரமணியன் (28). இவர், முதலூரில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், பக்கத்துவீட்டில் வசிக்கும் சவுந்தரபாண்டி மகன் லிங்ககுமார் (25) என்பவருக்கும் நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. 

இந்நிலையில் கடந்த 4ம் தேதி சுப்பிரமணியன், சுப்பிரமணியபுரம் விலக்கு இசக்கியம்மன் கோயில் அருகே பைக்கை நிறுத்தி விட்டு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த லிங்ககுமார், முன்விரோதம் காரணமாக அங்கு நின்று கொண்டிருந்த சுப்பிரமணியன் மீது காரில் வேகமாக வந்து மோதியதாக கூறப்படுகிறது. இதில் சுப்பிரமணியன் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் அனிதா வழக்குபதிந்து லிங்க குமாரை தேடி வந்தனர். இந்நிலையில் நெல்லை பாளையங் கோட்டையில் பதுங்கி இருந்த லிங்ககுமாரை தனிப்படை போலீசார் நேற்று புதன்கிழமை கைது செய்தனர்.

  • Share on

கோவில்பட்டி அருகே லோடு ஆட்டோ - பைக் மோதி விபத்து - வாலிபர் பலி

சாத்தான்குளத்தில் இருந்து வேளாங்கண்ணி சென்ற முதியவர் மாயம் - போலீஸார் விசாரணை!

  • Share on