• vilasalnews@gmail.com

கோவில்பட்டி அருகே லோடு ஆட்டோ - பைக் மோதி விபத்து - வாலிபர் பலி

  • Share on

கோவில்பட்டி தேசிய நான்கு வழிச்சாலையில் லோடு ஆட்டோவும் பைக்கும் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.

பழனி அப்பர் தெருவை சேர்ந்தவர் சதாம் உசேன் ( 32 ).‌  இவர் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்த பொழுது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில், லோடு ஆட்டோ வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ரா நினைவரங்கத்திற்கு வந்த வேர்களை தேடி குழுவினர்!

சாத்தான்குளம் அருகே தொழிலாளியை கார் ஏற்றி கொல்ல முயன்ற இளைஞர் நெல்லையில் கைது!

  • Share on