• vilasalnews@gmail.com

கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ரா நினைவரங்கத்திற்கு வந்த வேர்களை தேடி குழுவினர்!

  • Share on

தமிழகத்தினை பூர்வீகமாக கொண்டு வெளிநாடுகளில் வாழும் தமிழக இளைஞர்கள், இளம்பெண்கள் தமிழகத்தின் கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு ஆகியவற்றை தெரிந்து கொள்ளும் வகையில் அயலகத் தமிழர்கள் நலன் மற்றும் மறுவாழ்வு துறையின் சார்பில் வேர்களை தேடி என்ற திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கடந்த டிசம்பர் - ஜனவரி மாதத்தில் இந்த திட்டத்தின் முதற்கட்டமாக 58 அயலக தமிழக இளைஞர்கள், இளம்பெண்கள் தமிழகத்தில் சுற்றுலா மேற்கொண்டனர். 2வது கட்டமாக வேர்களை தேடி திட்டத்தின் கீழ் இலங்கை, மலேசியா, மியான்மார், உகாண்டா உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த 100 பேர் கடந்த 1ந்தேதி தமிழகத்தில் சுற்றுலாவினை தொடங்கினர். மகாபலிபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் வரலாலாற்று சிறப்பு மிக்க இடங்களை பார்வையிட்டு பின்னர் 8வது நாளாக இன்று தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் வேர்களை தேடி குழுவினர் தங்களது பயணத்தினை தொடங்கினார்.

எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் வீடு, மணிமண்டபம், உமறுப்புலவர் மணிமண்டபம் ஆகியவற்றை பார்வையிட்ட பின்னர் கோவில்பட்டியில் உள்ள கரிசல் இலகத்தியத்தின் தந்தை கி.ரா. என்று அழைக்கப்படும் கி.ராஜநாரயணன் நினைவரங்கத்தினை பார்வையிட்டனர். அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையெடுத்து வேர்களை தேடி குழுவினருக்கு கரிசல் இலக்கியத்தின் பெருமை மற்றும் கரிசல் எழுத்தளர்கள் குறித்தும், தமிழக மக்களின் பண்பாடுகள் குறித்தும் சாகித்யா அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் எடுத்துரைத்தார்.

இந்த பயணம் குறித்து உகாண்டாவில் இருந்து வந்த நர்மிதா கூறுகையில், "இந்த பயணம் தங்களும் மிகுந்த அனுபவமிக்க பயணம், 19 ஆண்டுகள் கழித்து தாய்நாட்டிற்கு வந்து தாய் மண்ணில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இந்த வாய்ப்பு கொடுத்த முதல்வருக்கு தங்களது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், தஞ்சாவூர் பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம் ஆகியவற்றை மிகவும் ரசித்து பார்த்தகாகவும் கூறினார்".

இந்த நிகழ்ச்சியில் அயலகத் தமிழர்கள் நலன் மற்றும் மறுவாழ்வு துறை கண்காணிப்பாளர்கள், விஜய், கனிமொழி, அலுவலர் ராஜேஸ்வரி மற்றும் கோவில்பட்டி துணை வட்டாட்சியர்கள் அறிவழகன், வெள்ளத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • Share on

இந்த நூற்றாண்டில் மிகப் பெரிய சமூக அநீதி - கிருஷ்ணசாமி கருத்து!

கோவில்பட்டி அருகே லோடு ஆட்டோ - பைக் மோதி விபத்து - வாலிபர் பலி

  • Share on