தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 14 மாவட்ட எஸ்பிக்கள் உட்பட 24 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
28.8.1991 ஆம் ஆண்டு பிறந்த ஆல்பர்ட் ஜான், மேற்கு வங்காளத்தின் காரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் ( ஐஐடி காரக்பூர் ) பயின்றுள்ளார். 18.12.2017 ஆண்டு ஐபிஎஸ் பணியில் சேர்ந்தார். தமிழகத்தில் வேலூர் சப் டிவிஷன் ஏஎஸ்பி பணியாற்றிய பின், ஆல்பர்ட் ஜான் எஸ்.பி ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 2022 ல் சென்னை போக்குவரத்து துணை ஆணையர்(வடக்கு) பதவி ஏற்றுள்ளார். ஜூலை 2022ல் சென்னை பூக்கடை துணை ஆணையராகவும் பதவி ஏற்று பணியாற்றிய ஆல்பர்ட் ஜான், மே 2023 ல் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பியாக பதவி ஏற்று பணியாற்றிவந்த நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பணியாற்றிய இடங்களில் எல்லாம், போக்குவரத்து, சட்டம் - ஒழுங்கு பிரச்சனைகளில் கூடுதல் கவனம் செலுத்தினாராம். கஞ்சா, கள்ளச்சாராயம் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்தி பணியாற்றி வந்தது குறிப்பிடதக்கது.